மாந்திரிகத்தின் எட்டு நிலைகள்
பொதுவாக வசியம் ,மோகனம், தம்பனம், உச்சாடனம் காத்தலுக்கும் வித்வேதனம், பேதனம், ஆகர்ஷணம், மாரணம் அழித்தலுக்கும் பயனாகும்.
இந்த முறைகள் காலம் காலமாய் ரகசியமாக பேணப் பட்டு வருகிறது. தகுதியான உடல் மற்றும் மனபக்குவம் உள்ளவர்கள் மட்டுமே இதனை முயற்சிக்க வேண்டும். இல்லையேல் தேவையற்ற எதிர் எதிர்வினைகள் உண்டாகும். குருமுகமாக பயில்வதே சிறப்பு. தகுதியான குருவின் வழிகாட்டுதல் இல்லாத பட்சத்தில் யாரும் இவற்றை முயற்சிக்க வேண்டாம்.
மாந்திரிகத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள் இதுவரை அறிவியல் ரீதியாக எங்கும் நிரூபிக்கப் படவில்லை. இம்மாந்திரிக கலைகளை அற்பபொருள் இயம்புவதற்கு போலியாக பயன்படுத்தி மேலும் இகழ்ச்சி உண்டாக்கி விட்டார்கள். எனவே நல்லொழுக்கம், நற்பண்புகள், உயர்ந்த மன பக்குவம் மற்றும் தகுந்த குருவின் ஆசி இல்லாத யாவரும் இதை ஒரு தகவலாகவே கருதிக்கொள்ளவும். எந்த வித முன்னெடுப்பும் முயற்சியும் செய்யவேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.
எந்த ஒரு மாந்திரிக முறையிலும் சித்தியடைய மந்திரம், யந்திரம் மற்றும் அதனை பிரயோகிக்கும் தந்திரம் ஆகிய மூன்றும் ஒன்றினைய வேண்டும். இந்தக் கலைகளை கையாளும் பொழுது சில பல கன்மங்களுக்கு ஆளாகிறோம். ஆகவே, அவசிய அவசரங்கள் இருந்தால் மட்டுமே கையாள வேண்டும்.
மாந்திரிக அவுஷதிக்கள் (மூலிகைகள்) என்று 64 உண்டு. நேர்வினை பெயர்க்கும் மூலிகைகள் 32, எதிர்வினை பெயர்ப்பவை 32. முறைப்படி காப்பு காட்டி சாபநிவர்த்தி செய்து உயிர் கொடுத்து உரு ஏற்றிய மூலிகை வேர்களை பறிக்கவேண்டும் .
இந்த கலைகளை அறிந்து தெளிந்து தேர்ந்தவர்கள் ஒருபோதும் தங்களை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். அத்தகைய சிறப்புடையவர்களை எளிதில் இனம் காண இயலாது.
Labels:Purpose, Esoteric, Science all, siddha, சித்தர், சித்தி, மாந்திரிகம்










