சுவாதிஷ்டானம்
1/02/2017
சுத்தமுடன் ஆதார மூலஞ்சொன்னேன்
சுவாதிஷ் டானத்தினுட சுகத்தைக்கேளு
பத்தமுடன் நாற்கோணம் இதழ்தான் ஆறு
பதிவான பொன்னிறம்போல் இருக்கும் மைந்தா
சுத்தமுள்ள நாற்கோணம் நடுவிலேதான்
தெளிவான நகாரமென்ற தீபமேத்தி
நித்தமுமே நகாரமுடன் சிவறீங்கிட்டு
நிலையறிந்து உருச்செபிச்சு நிசத்தைக்கேளே.
கேளடா நிலையறிந்து வாசிகொண்டு
கீழ்மேலும் நன்றாக நின்றுபாரு
சூளடா நின்றநிலை பார்க்கும்போது
சோதியொன்று தோணுமடா பிரமசொரூபம்
ஆளடா பிரம்மநிலை ரூபங்கண்டால்
அடக்காத வாசியது அடங்கும் வீட்டில்
காளடா வாசியது அடங்கி நின்றால்
கண்ணடங்கா பூராணத்தைக் காணலாமே
- அகத்தியர்
Labels:Purpose, Esoteric, Science all, Chakra, kundalini, siddha, sitthar, yoga, குண்டலினி, சித்தர், சுவாதிஷ்டானம்(swadishtana), யோகம்


Post a Comment