அனாகதம்
1/02/2017
நில்லடா நிலை அறிந்து சுகத்தைக்காண
நிசமான ருத்திரனார் பதியைக்கேளு
சொல்லடா சொல்லறிந்து சுகத்தைப் பார்க்க
சுகமான முக்கோணம் நன்றாய்க்கீறி
அல்லடா முக்கோணத் ததிலேநீதான்
அப்பனே பன்னிரண்டி தழ்தான்போடு
விள்ளடா செம்புனிற மான கோட்டை
விசையான கோட்டைநடு விந்துபோடே.
போடப்பா விந்துநடு ஓங்காரந்தான்
பூரணமாய் சிங் கிலி யென்று நாட்டி
நாடப்பா விந்துநடு முனைமைத்தில்
நாடினின்று சிங்கிலியென்று சொல்லி
வீடப்பா பிலப்பதற்கு தினம் நூற்றெட்டு
விரும்பிமன தறிவதினா லுருவே செய்தால்
சூடப்பா தானேறி முனைமைத்தில்
சூரியன்போல் காந்திவெரு சோதியாமே.
சோதியென்ற காந்தியடா சூரியகாந்தி
துலங்குநடுச் சுழினையைநீ கண்டாயானால்
ஆதியென்ற ஆதாரம் ஆறாதாரம்
அரூபமய மானதொரு மேலாதாரம்
நீதியடன் தோணுமடா வாசியாலே
நின்றிலங்கும் வாசிதன்னைத் தன்னுள்பார்த்து
சாதியென்று சராசரத்தைத்தானாயெண்ணி
சதாயோக பூரணமாய் நின்றுபாரே.
பார்க்கையிலே ருத்திரனார் கடாக்ஷத்தாலே
பாதாதி கேசமுதல் நன்றாய்ப் பாரு
சேர்கையுடன் பார்கையிலே மைந்தாமைந்தா
என்ன சொல்வென் அக்கினிப்போல் ஆகுந்தேகந்
தீர்க்கமுடன் அக்கினிப்போல் தன்னுள் கண்டாற்
சிவயோக வாழ்வுவெகு திறமாய் நிற்கும்
மார்க்கமுடன் உருத்திரனார் பதியைப் பார்த்து
மனங்குவிந்து பூரணத்தில் மருவியேறே.
- அகத்தியர்
Labels:Purpose, Esoteric, Science all, Chakra, kundalini, siddha, sitthar, yoga, அனாகதம்(Anahatha), குண்டலினி, சித்தர், யோகம்


Post a Comment