காற்றைப் பிடிக்கும் கணக்கு...

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாமே
(திருமூலர்)

காற்றைப் பிடிக்கும் கணக்கென்ன?
(குரு மண்டலத்தின் அருளால் என் சிற்றறிவுக்கு எட்டிய பொழிப்புரை)

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாமே
- திருமூலர்

காற்றைப் பிடிக்கும் கணக்கென்ன?

புவி சூரியனை சுற்ற ஒரு ஆண்டாக
சத்ய யுகத்தில் தொடங்கி
5184 சுழற்சிகள் சுழன்று
த்ரேத  யுகத்தில் 3888 சுழற்சிகள்
த்வாபர  யுகத்தில் 2592 சுழற்சிகள்
கலி  யுகத்தில் 1296 சுழற்சிகள்
மீண்டும் மேல் நோக்கி
கலி  யுகத்தில் 1296 சுழற்சிகள்
த்வாபர  யுகத்தில் 2592 சுழற்சிகள்
த்ரேத  யுகத்தில் 3888 சுழற்சிகள்
சத்ய யுகத்தில் 5184 சுழற்சிகள் சுழன்று
1 கல்பம் 25920 சுழற்சிக்கு பின் பூரணம்.

புவியின் ஆயுள் 100 கல்பங்கள்,
அதுவே 2592000 ஆண்டுகள்.

1 புவி சுழற்சி 360 புவன சுழற்சிகளாக
இப்புவனத்தின் ஆயுள் 933120000 நாட்கள்.

பூலோக வாசிகளின் ஆயுளும் 933120000 மூச்சு சுழற்சிகள்.
நிமிடம் 15 மூச்சு, ஒரு நாளைக்கு 21600 மூச்சு என,
விம்ஷத்தோரி என்னும் 120 ஆண்டுகள் பூரண ஆயுள்.
நிமிடம் 1 மூச்சு மிகினும் ஆயுளில் 71/2 ஆண்டுகள் குறையும்.
நிமிடம் 18 ஆக, 100 ஆண்டுகள் ஆயுள் நிர்ணயம்.

அமர்ந்தாசனத்தில் 12 அங்குல மூச்சு,
சுழுமுனைக்கும் நுரை-ஈரலுக்கும் ஓட,
நடக்கும் போது 18 அங்குல மூச்சு,
சுழுமுனைக்கும் இதயத்திற்கும்,
ஒடும்போது 24 அங்குல மூச்சு,
சுழுமுனைக்கும் நாபிக்கும்,
தூங்கும் போது 32 அங்குல மூச்சு,
சுழுமுனைக்கும் குதத்திற்கும்,
உணர்வு கிளர்ச்சியின் போது,
64 அங்குலம் வரை உடலெங்கும் பரவ,
மனிதனின் ஆயுள் சுவாசத்தின் சாசனம்.

வாசி யோக சித்தி பெற்ற மாணாக்கன்,
முஹூர்த்தமென்னும் 48 நிமிடத்திற்கு 1 முச்சு என,
நாள் 21600 மூச்சுக்கு பதிலாக,
30 மூச்சுகளே சுழற்றி,
மீதம் உள்ள ஆயுளை,
720 மடங்கு பெருக்கி,
பண்ணாயிரம் ஆண்டுகள் ஆயுள் நீட்டித்து
தவம் இயற்றும் வல்லபம் சித்தம்.

சித்தர் மண்டலம் அடைந்த பின்,
அவ்வொரு மூச்சும் அவசியமற்று போக,
ஜீவா சமாதியில் உடலை காத்து,
பிரகாய பிரவேசம் சித்தம்.

மாந்திரிகம் - அட்டகன்ம சித்துக்கள்


மாந்திரிகத்தின் எட்டு நிலைகள்

பொதுவாக வசியம் ,மோகனம், தம்பனம், உச்சாடனம் காத்தலுக்கும் வித்வேதனம், பேதனம், ஆகர்ஷணம், மாரணம் அழித்தலுக்கும் பயனாகும்.

இந்த முறைகள்  காலம் காலமாய் ரகசியமாக பேணப் பட்டு வருகிறது. தகுதியான உடல் மற்றும் மனபக்குவம் உள்ளவர்கள் மட்டுமே இதனை முயற்சிக்க வேண்டும். இல்லையேல் தேவையற்ற எதிர் எதிர்வினைகள் உண்டாகும். குருமுகமாக பயில்வதே சிறப்பு. தகுதியான குருவின் வழிகாட்டுதல் இல்லாத பட்சத்தில் யாரும் இவற்றை முயற்சிக்க வேண்டாம்.

மாந்திரிகத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள் இதுவரை அறிவியல் ரீதியாக எங்கும் நிரூபிக்கப் படவில்லை. இம்மாந்திரிக கலைகளை அற்பபொருள் இயம்புவதற்கு போலியாக பயன்படுத்தி மேலும் இகழ்ச்சி உண்டாக்கி விட்டார்கள். எனவே நல்லொழுக்கம், நற்பண்புகள், உயர்ந்த மன பக்குவம் மற்றும் தகுந்த குருவின் ஆசி இல்லாத யாவரும் இதை ஒரு தகவலாகவே கருதிக்கொள்ளவும். எந்த வித முன்னெடுப்பும் முயற்சியும் செய்யவேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

எந்த ஒரு மாந்திரிக முறையிலும் சித்தியடைய மந்திரம், யந்திரம் மற்றும் அதனை பிரயோகிக்கும் தந்திரம் ஆகிய மூன்றும் ஒன்றினைய வேண்டும். இந்தக் கலைகளை கையாளும் பொழுது சில பல கன்மங்களுக்கு ஆளாகிறோம். ஆகவே, அவசிய அவசரங்கள் இருந்தால் மட்டுமே கையாள வேண்டும்.

மாந்திரிக அவுஷதிக்கள் (மூலிகைகள்) என்று 64 உண்டு. நேர்வினை பெயர்க்கும் மூலிகைகள் 32, எதிர்வினை பெயர்ப்பவை 32. முறைப்படி காப்பு காட்டி சாபநிவர்த்தி செய்து உயிர் கொடுத்து உரு ஏற்றிய மூலிகை வேர்களை பறிக்கவேண்டும் .

இந்த கலைகளை அறிந்து தெளிந்து தேர்ந்தவர்கள் ஒருபோதும் தங்களை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். அத்தகைய சிறப்புடையவர்களை எளிதில் இனம் காண இயலாது.

ஆக்ஞை

காணவே மயேஸ்வரத்தின் சுடாக்ஷத்தாலே
கண்ணான சதாசிவத்தின் கருவைக்கேளு
தோணவே ஆக்கினையாம் விந்துவட்டம்
சொல்நிறைந்த வட்டமதில் இதழ்தான் ரெண்டு
பூணவே வட்டமதின் நிறந்தான் சொல்வேன்
புதுமைவெகு புதுமையடா ஆகாசந்தான்
பேணவே ஆகாச வட்டத்துள்ளே
பேர்பெரிய பிரணவத்தை நன்றாய் நாட்டே.
நாட்டமுடன் ஓங்கார நடுவிலேதான்
நன்மையுடன் அகாரமுடன் உகாரஞ்சாற்றி
தேட்டமுடன் ரீங்காரம் னுகாரஞ்சாற்றி
திறமாகத் தானிருந்து புருவமேகி
கூட்டமன்றி தானாகத் தானேநின்று
குணமாக அங்றீங் உம்மென்றேதான்
வாட்டமில்லா மனதாக தினம்நூறு மைந்தா
மார்க்கமுடன் தான் செபிக்க வரிசைகேளே.
வரிசையுடன் ஆதாரஞ் செபித்து மைந்தா
மார்க்கமுடன் சதாசிவத்தை மகிழ்ந்துகண்டால்
தெரிசனமாய் நின்றுதொரு ஆறாதாரஞ்
சிவசிவா அரூபமய மாகத் தோணும்
கரிசினமாய் நின்றதொரு ஆறாதாரங்
கண்ணடங்காத் தெரிசனங்கள் காணலாகும்
புரிசமுடன் சதாசிவத்தில் மனதை வைத்து
புத்தியுடன் அனுதினமும் பூசைபண்ணே.

- அகத்தியர்



விசுத்தி


மருவி நின்ற தலமதுதான் விசுத்திவீடு
மகத்தான அறுகோணம் நன்றாய்ப்போட்டு
திருவிந்த அறுகோணஞ் சுத்திநல்ல
தீர்க்கமுடன் பதினாறு இதழ்தான் போட்டு
குருவிருந்த கோட்டை வெகு கருப்பாய் நிற்குங்
குணமான அக்கோட்டை நடுவிலேதான்
உருவறிந்து விந்திட்டு ஓங்காரஞ் சுத்தி
உத்தமனே வங் கிலி யங்கென்று போடே.
போட்ட பின்பு மனதுகந்து மனக்கண்சாத்தி
பூரணமாய் வங் கலி யங்கென்றிட்டு
நாட்டமுடன் தானிருந்து ஒரு நூறு மைந்தா
நன்மையுடன் தான் செபித்து நயனமேவி
தேட்டமுடன் குருபதியில் சென்று பாரு
சிவசிவா வாயுவேக லகிரியுண்டாம்
வாட்டமில்லா லகிரியடா வாயுவேகமாகு
மகத்தான யோகசிவ போதமாமே.
ஆமப்பா யோகமென்ற சிவயோகந்தான்
அருளான முச்சுடரின் அந்தத்தாலே
ஓமப்பா முச்சுடரின் அந்தம்பார்த்தால்
ஒளிவிளக்காய் நின்றதொரு மூலத்தீதான்
வாமப்பா நிறைந்ததொரு மூலத்தீதான்
வளர்ந்துதடா அறுகோண வரையின் மேலே
நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்ப்பாரு
நாதாந்த மயேஸ்வரத்தை காணலாமே.

- அகத்தியர்

அனாகதம்


நில்லடா நிலை அறிந்து சுகத்தைக்காண
நிசமான ருத்திரனார் பதியைக்கேளு
சொல்லடா சொல்லறிந்து சுகத்தைப் பார்க்க
சுகமான முக்கோணம் நன்றாய்க்கீறி
அல்லடா முக்கோணத் ததிலேநீதான்
அப்பனே பன்னிரண்டி தழ்தான்போடு
விள்ளடா செம்புனிற மான கோட்டை
விசையான கோட்டைநடு விந்துபோடே.
போடப்பா விந்துநடு ஓங்காரந்தான்
பூரணமாய் சிங் கிலி யென்று நாட்டி
நாடப்பா விந்துநடு முனைமைத்தில்
நாடினின்று சிங்கிலியென்று சொல்லி
வீடப்பா பிலப்பதற்கு தினம் நூற்றெட்டு
விரும்பிமன தறிவதினா லுருவே செய்தால்
சூடப்பா தானேறி முனைமைத்தில்
சூரியன்போல் காந்திவெரு சோதியாமே.
சோதியென்ற காந்தியடா சூரியகாந்தி
துலங்குநடுச் சுழினையைநீ கண்டாயானால்
ஆதியென்ற ஆதாரம் ஆறாதாரம்
அரூபமய மானதொரு மேலாதாரம்
நீதியடன் தோணுமடா வாசியாலே
நின்றிலங்கும் வாசிதன்னைத் தன்னுள்பார்த்து
சாதியென்று சராசரத்தைத்தானாயெண்ணி
சதாயோக பூரணமாய் நின்றுபாரே.
பார்க்கையிலே ருத்திரனார் கடாக்ஷத்தாலே
பாதாதி கேசமுதல் நன்றாய்ப் பாரு
சேர்கையுடன் பார்கையிலே மைந்தாமைந்தா
என்ன சொல்வென் அக்கினிப்போல் ஆகுந்தேகந்
தீர்க்கமுடன் அக்கினிப்போல் தன்னுள் கண்டாற்
சிவயோக வாழ்வுவெகு திறமாய் நிற்கும்
மார்க்கமுடன் உருத்திரனார் பதியைப் பார்த்து
மனங்குவிந்து பூரணத்தில் மருவியேறே.

- அகத்தியர்


மணிபூரகம்




காணவே பிரம்மாவின் பதியைச் சொன்னேன்
கருவான மணிபூரகங் கருத்தைக் கேளு
தோணவே பிறை மூன்றாம் பிறைபோற்கீறித்
துலங்க அதில் ஈரைந்து பத்தும் போட்டு
பேணவே நிறமதுதான் பளிங்குபோலாம்
பிறைமூன்றாம் பிறை நடுவே மகாரமிட்டு
பூணவே சங்கிலி மங்கென்றேதான்
பூரணமாய்த் தினம் நூறு செபித்துக்காரே.
கார்க்கவுரு செபித்து நடுப்புருவமதில்
கண்ணுமனக் கண்ணாலே நன்றாய்ப் பார்த்தால்
மார்க்கமுடன் லட்சுமியும் விஷ்ணுதேவர்
மகத்தான பூரணச்சந் திரன்போல் மைந்தா
யேர்க்கையுடன் இருதயத்தில் காணும்பாரு
இன்பமுள்ள தெரிசனத்தைத் கண்டாயானால்
தீர்க்கமுள்ள சிவயோக வாழ்வு பெற்று
செல்வபதி யாயிருப்பாய் தினமும் நோக்கே.
நோக்குவது பூரணச்சந் திரனைநோக்கு
நுண்மையுடன் பூரணமாய் நின்றாயானால்
மூக்குநுனி யந்தமதில் வாசிநின்று
நலங்காமல் தீபமதில் நாடும்பாரு
வாக்குமன தொன்றாகி நின்றுபாரு
மக்களே கன்பசுவு வாழ்வுண்டாகும்
தூக்குமென்ற கொடுமைதனை அகற்றிமைந்தா
சுகமான இடமறிந்து சுகத்தில் நில்லே.

- அகத்தியர்

சுவாதிஷ்டானம்


சுத்தமுடன் ஆதார மூலஞ்சொன்னேன்
சுவாதிஷ் டானத்தினுட சுகத்தைக்கேளு
பத்தமுடன் நாற்கோணம் இதழ்தான் ஆறு
பதிவான பொன்னிறம்போல் இருக்கும் மைந்தா
சுத்தமுள்ள நாற்கோணம் நடுவிலேதான்
தெளிவான நகாரமென்ற தீபமேத்தி
நித்தமுமே நகாரமுடன் சிவறீங்கிட்டு
நிலையறிந்து உருச்செபிச்சு நிசத்தைக்கேளே.
கேளடா நிலையறிந்து வாசிகொண்டு
கீழ்மேலும் நன்றாக நின்றுபாரு
சூளடா நின்றநிலை பார்க்கும்போது
சோதியொன்று தோணுமடா பிரமசொரூபம்
ஆளடா பிரம்மநிலை ரூபங்கண்டால்
அடக்காத வாசியது அடங்கும் வீட்டில்
காளடா வாசியது அடங்கி நின்றால்
கண்ணடங்கா பூராணத்தைக் காணலாமே

- அகத்தியர்